என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம்அமெரிக்கா
நீங்கள் தேடியது "ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம்அமெரிக்கா"
பொருளாதார தடையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் தொடர்ந்த வழக்கு விசாரணையில், தங்களது தடைகள் சட்டபூர்வமானதே என அமெரிக்கா வாதிட்டுள்ளது. #IranNuclearDeal #USsanctions #UN
தி ஹேக்:
ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இரண்டாம் கட்ட பொருளாதார தடைகள் வரும் நவம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவின் தொடர் பொருளாதார தடைகளால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எச்சரிக்கையால் பல சர்வதேச நிறுவனங்கள் ஈரானை விட்டு வெளியேறி வருகின்றன. மேலும், ஈரான் உடன் பொருளாதார உறவு கொண்டிருந்த பல நாடுகள் அமெரிக்காவின் மிரட்டலால் தொடர்பை துண்டித்து வருகின்றன.
பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் விமான நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் ஈரானுக்கான விமான சேவையை ரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளன. ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. இதனால் ஈரானின் நாணய மதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் பாதியாக சரிந்துள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்த்து நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் கடந்த ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்தது. அமெரிக்கா விதித்த தடைகளை ரத்து செய்யவேண்டும். ஈரானுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அமெரிக்கா உரிய இழப்பீடு தர வேண்டும் என ஈரான் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நேற்று தொடங்கியது. அப்போது, அமெரிக்காவின் பொருளாதார தடைகள் இரு நாடுகள் இடையே 1955ம் ஆண்டு போடப்பட்ட நட்பு மற்றும் பொருளாதார உறவு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் ஈரான் தரப்பில் வாதிடப்பட்டது.
இன்று அமெரிக்கா தனது வாதத்தில் கூறுகையில், “ஈரான் மீது போடப்பட்ட பொருளாதார தடைகள் முழுக்க முழுக்க சட்ட பூர்வமானதே. தேசத்தின் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் இது போன்ற சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்த்து ஈரானால், ஐநாவிலோ, சர்வதேச நீதிமன்றத்திலோ முறையிட முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நல்லுணர்வு சார்ந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் வழக்கு தொடர தங்களுக்கு உரிமை இருப்பதால் ஈரான் முயற்சிக்கிறது. நீதிமன்றங்கள் மூலம் தீர்வு என்பது அந்த ஒப்பந்தங்களில் இல்லை. தூதரங்கள் வழியாகவே ஒப்பந்தங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. நீதிமன்றங்களின் வழியே இல்லை” என அமெரிக்கா தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X